Sep 15, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 50-க்கும் மேற்பட்டோர் பலி, 5000-த்திற்கும் அதிகமானோர் உதவிக்காக காத்திருப்பு
உலகச் செய்திகள்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 50-க்கும் மேற்பட்டோர் பலி, 5000-த்திற்கும் அதிகமானோர் உதவிக்காக காத்திருப்பு

Share:

இந்தோனேசியாவின் ஃபுளோரஸ் தீவில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட 7.7 ரிக்டர் நிலநடுக்கத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும், சுமார் 5,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்குப் பின்னர் 341 அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

பல பகுதிகளில் மின்சாரம், தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன், மீட்புப் பணிகளுக்கான சில சாலைகளும் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட மக்கள் உணவு, குடிநீர், மருந்துகள் மற்றும் குழந்தைகளுக்கான டயப்பர்கள் அவசரமாக தேவைப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

Related News