ஆஸ்திரேலியாவில் அமைத்திருக்கும் சிட்னி விமான நிலையத்தில், ஒரு மாதத்திற்குள் நான்காவது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை, கோல்ட்கோஸ்ட்டுக்குப் புறப்பட தயாராக இருந்த குவாண்டாஸ் ஏர்பஸ் A321 விமானம், மெல்போர்னிலிருந்து வந்த குவாண்டாஸ் போயிங் 737 விமானத்தைத் தவிர்க்க திடீரென பிரேக் போட்டதால், இரு விமானங்களும் ஒரே சந்திப்புப் பகுதிக்கு வழிநடத்தப்பட்டதே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 27 மற்றும் ஆகஸ்ட் 9 ஆகிய தேதிகளிலும் சிட்னி விமான நிலையத்தில் விமானங்கள் மோதும் அபாயம் ஏற்பட்டது. ஆகஸ்ட் 9 சம்பவத்தில், ஜெட்ஸ்டார் விமானத்தைத் தவிர்க்க முயன்றபோது ஒரு கேபின் பணியாளர் காயமடைந்தார்.
இதனிடையே, புதிய அனைத்துலக விமான நிலையம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து சிக்கலான வான்வெளி மாற்றங்களுக்கு கட்டுப்பாட்டு ஊழியர்கள் போதிய பயிற்சி பெறவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.








