Aug 22, 2026
Thisaigal NewsYouTube
மியன்மாரில் புத்த மடாலயம் மீது வான்தாக்குதல்: 14 பேர் பலி
உலகச் செய்திகள்

மியன்மாரில் புத்த மடாலயம் மீது வான்தாக்குதல்: 14 பேர் பலி

Share:

மியன்மாரின் சாகைங் பிராந்தியத்தில் உள்ள புத்த மடாலயம் மீது ராணுவ விமானம் நடத்தியதாகக் கூறப்படும் வான்தாக்குதலில், 3 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

Swel Le Oh கிராமத்தில் உள்ள புத்த மடாலயத்தில் ஒரு வார கால தியான நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், இன்று காலை சுமார் 9 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த மடாலய வளாகத்துக்குள் சுமார் 15 நிமிட இடைவெளியில் இரண்டு குண்டுகள் வீசப்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையும் கவலை தெரிவித்துள்ளது.

Related News