Aug 25, 2026
Thisaigal NewsYouTube
“ஜெர்மனி விமான நிலையம் அருகே 3-வது ட்ரோன், வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு”
உலகச் செய்திகள்

“ஜெர்மனி விமான நிலையம் அருகே 3-வது ட்ரோன், வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு”

Share:

பெர்லின்: ஜெர்மனியில் அமைந்திருக்கும் லீப்சிக்/ஹாலே விமான நிலையத்தை குறிவைத்து நடத்த முயற்சி செய்யப்பட்டதாகவும் மற்றும் சந்தேகிக்கப்படும் தாக்குதல் தொடர்பான விசாரணையில், ஜெர்மன் புலனாய்வாளர்கள் சந்தேகப்படி மூன்றாவது ட்ரோனையும், பல ராணுவ வெடி பொருள்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

ஆகஸ்ட் 14ஆம் தேதி, லீப்சிக்/ஹாலே விமான நிலையத்தின் மேற்குப் பகுதியில் மூன்றாவது ட்ரோன் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதே பகுதியில் சுமார் 50 கிராம் எடையுள்ள, ராணுவ வெடிபொருளான ஹெக்சோஜன் என சந்தேகிக்கப்படும் பொருளும் மீட்கப்பட்டது.

ஆகஸ்ட் 4ஆம் தேதி, ராணுவப் பொருட்களை ஏற்றிச் சென்ற உக்ரைனின் அன்டோனோவ் சரக்கு விமானம் அருகே வெடிபொருட்கள் பொருத்தப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

மற்றொரு ட்ரோன் டி.எச்.எல் சரக்கு விமானத்துடன் மோதியிருக்கலாம் என்றும் விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தில் ரஷ்ய உளவுத்துறைக்கு தொடர்பு இருக்கலாம் என பாதுகாப்பு வட்டாரங்கள் சந்தேகித்துள்ள நிலையில், மாஸ்கோ இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

Related News