தென் தாய்லாந்தின் பட்டாணி, யாலா மற்றும் நராதிவாட் பகுதிகளில் நேற்று இரவு ஒரே நேரத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகள் மற்றும் தீவைப்பு தாக்குதல்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
குறைந்தது 12 இடங்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளதுடன், முக்கிய பகுதிகளில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நராதிவாட் மாநிலத்தில் நேற்று இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து–மலேசிய எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவங்களுக்குப் பின்னால் இருப்பவர்களை கண்டறிய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.








