Sep 12, 2026
Thisaigal NewsYouTube
நேபாள வெள்ளத்தில் சிக்கிய 11 மலேசியர்களுடன் தொடர்பு துண்டிப்பு
உலகச் செய்திகள்

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 11 மலேசியர்களுடன் தொடர்பு துண்டிப்பு

Share:

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட கடும் வெள்ளத்தைத் தொடர்ந்து, அங்கு இருப்பதாக நம்பப்படும் 11 மலேசியர்களுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

போடே கோஷி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து வெள்ளம் ஏற்பட்டதில், சாலைகள், பாலங்கள் மற்றும் தொடர்பு வசதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மின்சாரம் மற்றும் தொடர்பு வலையமைப்புகள் பாதிக்கப்பட்டதே, 11 மலேசியர்களுடன் தொடர்பு துண்டிக்கப்படக் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

7 மலேசியர்களைக் கண்டறிந்து பாதுகாப்பை உறுதிப்படுத்த, காத்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகம், நேபாள அதிகாரிகள் மற்றும் தேடல்–மீட்புக் குழுக்களுடன் இணைந்து தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

நேபாளத்தில் உள்ள மலேசியர்கள் எச்சரிக்கையுடன் இருந்து, உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

மெக்சிகோவில் பட்டாசு வெடிவிபத்து: 10 பேர் பலி; 60 பேர் காயம்

மெக்சிகோவில் பட்டாசு வெடிவிபத்து: 10 பேர் பலி; 60 பேர் காயம்

நேபாளத்தில் வெள்ளப் பேரழிவு: 13-ஆம் நாள் துக்க அனுசரிப்பு

நேபாளத்தில் வெள்ளப் பேரழிவு: 13-ஆம் நாள் துக்க அனுசரிப்பு

நேபாள பேரிடர்: ஹெலிகாப்டர் மூலம் தேடியும் 17 மலேசியர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை

நேபாள பேரிடர்: ஹெலிகாப்டர் மூலம் தேடியும் 17 மலேசியர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல் கோருடன் அன்வார் கலந்துரையாடல்: புகைமூட்டம், காலநிலை நெருக்கடி குறித்து ஆலோசனை

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல் கோருடன் அன்வார் கலந்துரையாடல்: புகைமூட்டம், காலநிலை நெருக்கடி குறித்து ஆலோசனை