Sep 13, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்து: 43 டிகிரி செல்சியஸைத் தாண்டும் கோடை வெயில்; பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
உலகச் செய்திகள்

தாய்லாந்து: 43 டிகிரி செல்சியஸைத் தாண்டும் கோடை வெயில்; பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

Share:

பேங்காக், மார்ச் 16 – தாய்லாந்தில் இந்த ஆண்டு கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மார்ச் மாத இறுதியில் தொடங்கி ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் உச்சத்தை அடையும் என்றும், சில பகுதிகளில் வெப்பநிலை 42 முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மே ஹாங் சோன், லம்பாங் மற்றும் தாக் ஆகிய வடக்கு மாகாணங்களில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என்பதால், பொதுமக்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெப்பத்தாக்கம் மற்றும் 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் வெப்ப மயக்கத்தைத் தவிர்க்க, காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்தக் கடுமையான கோடைக்காலத்தைச் சமாளிக்க தாய்லாந்து அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பேங்காக் மாநகராட்சி சார்பில் நகரம் முழுவதும் 250-க்கும் மேற்பட்ட குளிரூட்டப்பட்ட 'கூலிங் சென்டர்கள்' திறக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க இந்த மையங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க 2,800-க்கும் மேற்பட்ட குடிநீர் விநியோக நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வறட்சி மற்றும் காட்டுத்தீயைத் தடுக்கவும், விவசாயிகளுக்கான நீர் மேலாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்தவும் மாகாண ஆளுநர்களுக்குப் பிரதமர் அனுடின் சர்ன்விராகுல் உத்தரவிட்டுள்ளார்.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை