Sep 13, 2026
Thisaigal NewsYouTube
எஞ்சிய வீடுகள் விற்பனை: தகுதியுள்ள அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் சம வாய்ப்பு - வீவக விளக்கம்
உலகச் செய்திகள்

எஞ்சிய வீடுகள் விற்பனை: தகுதியுள்ள அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் சம வாய்ப்பு - வீவக விளக்கம்

Share:

சிங்கப்பூர், மார்ச் 16: பிடிஓ விற்பனை நடைமுறைகளில் எஞ்சியிருக்கும் வீடுகள் அனைத்தும், தகுதியுள்ள அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் சமமான முறையில் விற்பனை செய்யப்படுவதை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் வீவக இந்த விளக்கத்தை அளித்துள்ளது. அதில், புதிய வீட்டுத் திட்டங்களின் கீழ் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களுக்குத் தேவையான வீடுகளைத் தேர்ந்தெடுத்த பின்னரே, எஞ்சியிருக்கும் வீடுகள் 'எஞ்சிய வீடுகளின் விற்பனை' திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றன.

இந்த முறையில் விற்பனை செய்யப்படும் வீடுகள், முந்தைய பிடிஓ விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமின்றி, தகுதியுள்ள அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் வெளிப்படையான மற்றும் நியாயமான முறையில் விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்படுவதாக வீவக தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த விற்பனையின் போது இனவாரி ஒதுக்கீடு விதிகள் கடைபிடிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை