Sep 13, 2026
Thisaigal NewsYouTube
விஜய் மீது பொறாமையா? - நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்
உலகச் செய்திகள்

விஜய் மீது பொறாமையா? - நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்

Share:

தமிழகம், மே.17-

விஜய் முதல்வராவதைத் தடுத்து நிறுத்தி, அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகள் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைக்க, தாம் பேச்சுவார்த்தை நடத்தும் அளவிற்கு, தரங்கெட்ட ஆள் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார்.

இன்று காலை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தமது நண்பரான மு.க.ஸ்டாலின் தோல்வியுற்றது தன்னை மிகவும் கவலையடையச் செய்த காரணத்தினால், அவரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியதாகவும் ரஜினி தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பிற்குப் பிறகு, விஜய் முதல்வராவதைத் தடுக்க தாம் முயற்சி செய்வதாகப் பரவிய வதந்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும், தமக்கும் விஜய்க்கும் வயது வித்தியாசத்தில் கிட்டத்தட்ட 25 வருடங்கள் இடைவெளி இருந்தாலும் கூட, அவருக்கு எக்ஸ் தளத்தில் தாம் வாழ்த்து கூறியதாகவும் ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தாம் அரசியலிலேயே இல்லாத போது விஜய் மீது ஏன் பொறாமை வரப் போகிறது? என்றும் ரஜினிகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதே வேளையில், தவெக தொண்டர்கள் விஜயைப் பாதிக்கும் வகையில் எந்த ஒரு செயலிலும் ஈடுபடக் கூடாது என்றும், மக்களுக்கு விஜய் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் ரஜினிகாந்த் விவரித்துள்ளார்.

Related News

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை