Sep 13, 2026
Thisaigal NewsYouTube
அமெரிக்கப் புலனாய்வுத் துறையினரால் தேடப்பட்டு வந்த வங்காள தேச நாட்டவர் மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார்
உலகச் செய்திகள்

அமெரிக்கப் புலனாய்வுத் துறையினரால் தேடப்பட்டு வந்த வங்காள தேச நாட்டவர் மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார்

Share:

கோலாலம்பூர், மார்ச்.06-

மலேசிய அதிகாரிகளின் உதவியுடன், வங்காள தேச நாட்டவர் ஒருவரை, மலேசியாவில் கைது செய்துள்ள அமெரிக்க புலனாய்வுத் துறையான எஃப்பிஐ அந்நபரை நாடு கடத்தியுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் தேடப்பட்டு வரும், 28 வயதான ஸோபைடுல் அமீன் என்ற அந்நபர், சர்வதேச குழந்தைகள் பாலியல் சுரண்டல் நிறுவனத்தை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக எஃப்பிஐ இயக்குநர் காஷ் படேல் தெரிவித்துள்ளார்.

ஸோபைடுல், நேற்று மலேசியாவிலிருந்து அமெரிக்காவின் அலாஸ்காவிற்கு அழைத்து வரப்பட்டதாகவும், இன்று பிற்பகல் அவர் மீது குற்றம் சாட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரைக் கைது செய்ய உதவிய மலேசிய அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் படேல் நன்றியும் தெரிவித்துள்ளார்.

Related News

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டணம் விதிக்க தாய்லாந்தில் அரசு ஆலோசனை

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை