Jun 19, 2026
Thisaigal NewsYouTube
தென் ஆப்பிரிக்காவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 42 பேர் பலி
உலகச் செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 42 பேர் பலி

Share:

ஜொகன்னஸ்பெர்க், அக்டோபர்.13-

தென் ஆப்பிரிக்காவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென் ஆப்பிரிக்காவின் தெற்கே ஈஸ்டர்ன் கேப் பகுதியில் இருந்து வடக்கே பிரிட்டோரியா தலைநகரில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லூயிஸ் டிரைகார்ட் நகர் அருகே நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அந்த பேருந்து மலை பகுதிகளுக்கு அருகே சென்ற போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில், தலைகுப்புற பேருந்து கவிழ்ந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி மீட்புப் பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் 42 பேர் உயிரிழந்தனர்.

இவர்கள் ஜிம்பாப்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர் ஆவர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Related News

தேசிய கீதம் பாழானது: புகைப்படக் கலைஞர்கள் மீது இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிருப்தி

தேசிய கீதம் பாழானது: புகைப்படக் கலைஞர்கள் மீது இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிருப்தி

அமெரிக்கா - இந்தியா வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: பிரதமர் மோடியை 'தேவதூதர், கில்லர்' என டிரம்ப் வர்ணனை

அமெரிக்கா - இந்தியா வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: பிரதமர் மோடியை 'தேவதூதர், கில்லர்' என டிரம்ப் வர்ணனை

மகனின் உடலை எழுப்ப முயன்ற தந்தையின் நெஞ்சையுருக்கும் பாசம்

மகனின் உடலை எழுப்ப முயன்ற தந்தையின் நெஞ்சையுருக்கும் பாசம்

உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்க்கச் சீனா விடுத்த அழைப்புக்குத் தைவான் கடும் எதிர்ப்பு

உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்க்கச் சீனா விடுத்த அழைப்புக்குத் தைவான் கடும் எதிர்ப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி