Sep 13, 2026
Thisaigal NewsYouTube
உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்க்கச் சீனா விடுத்த அழைப்புக்குத் தைவான் கடும் எதிர்ப்பு
உலகச் செய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்க்கச் சீனா விடுத்த அழைப்புக்குத் தைவான் கடும் எதிர்ப்பு

Share:

உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளைத் தங்களின் இணையதளங்கள் வாயிலாகப் பார்க்க அல்லது தங்களின் நாட்டுக்கு நேரில் வந்து பார்க்குமாறு சீனா விடுத்த அழைப்பைத் தைவான் அரசு கடுமையாக விமர்சித்துள்ளது. இந்தத் தொடரைத் தைவானில் உள்ள மக்கள் தங்களின் சொந்த நாட்டிலேயே எளிதாகப் பார்க்க முடியும் என்பதால் சீனாவின் இந்த சலுகை தேவையற்றது என்று தைவான் சுட்டிக்காட்டியுள்ளது. தைவானைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் தங்களின் நாட்டில் உலகக் கிண்ணப் போட்டிகளை நேரலையாகப் பார்க்க முடிவதில்லை என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, சீனா இந்த அழைப்பை விடுத்திருந்தது. தைவானைத் தனது நாட்டின் ஒரு பகுதி என்று உரிமை கொண்டாடி வரும் சீனா, தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தால் தைவான் மக்களுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகளை எடுத்துரைக்கும் நோக்கில் இதுபோன்ற தேவையற்ற சலுகைகளைத் தொடர்ந்து வழங்கி வருவதாகத் தைவானின் விவகாரங்களுக்கான கவுன்சில் குற்றம் சாட்டியுள்ளது.

Related News