Apr 19, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்கு உயர்த்திய ஆஸ்திரேலியா
உலகச் செய்திகள்

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்கு உயர்த்திய ஆஸ்திரேலியா

Share:

சிட்னி , ஜுலை 02-

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை சுமார் இரு மடங்காக உயர்த்தியுள்ளது ஆஸ்திரேலியா. இந்தக் கட்டண உயர்வு இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வருவதாகவும் அந்த நாடு தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் வீட்டு வசதி துறையில் கடுமையான நெருக்கடி நிலை நீடித்து வருவதாக தகவல். இதற்கு காரணம் வெளிநாடுகளில் இருந்து குடியேறுபவர்கள் எனச் சொல்லப்படுகிறது. அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நகர்வை ஆஸ்திரேலியா முன்னெடுத்துள்ளது.

அதன்படி இதுநாள் வரையில் 710 ஆஸ்திரேலிய டாலர்களாக இருந்த சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணம் 1,600 ஆஸ்திரேலிய டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.89,118 ஆகும். மேலும், பார்வையாளர் விசா, தற்காலிக பட்டதாரி விசா வைத்துள்ளவர்கள் ஆன்ஷோரில் மாணவர் விசா விண்ணப்பிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடைமுறைக்கு வரும் இந்த விசா மாற்றங்கள் சர்வதேச கல்வி முறையின் தரம், சிறந்த குடியேற்ற நகர்வுகளை ஆஸ்திரேலியாவுக்கு வழங்கும் என அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் கிளேர் ஓநீல் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் வெளியான குடியேற்றம் சார்ந்த தரவுகள் தான் இதற்கு காரணம் என தெரிகிறது.

மேலும், வெளிநாட்டு மாணவர்கள் விசா நீட்டிப்பை தவிர்க்கும் வகையிலும் நகர்வுகளை ஆஸ்திரேலியா முன்னெடுத்துள்ளது. சர்வதேச நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆஸி.யில் கல்வி பயில்வது அந்த நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. கடந்த 2022-2023 நிதியாண்டில் சுமார் 36.4 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களாக இந்த துறை தனது மதிப்பாகக் கொண்டு இருந்தது.

சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை ஆஸ்திரேலியா உயர்த்தியுள்ளது. அதனுடன் இந்த பிரிவில் போட்டியிடும் அமெரிக்கா மற்றும் கனடாவை காட்டிலும் இந்த கட்டணம் அதிகம். அங்கு முறையே 185 மற்றும் 110 டாலர்களாக விசா கட்டணம் உள்ளது.

Related News

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு