Sep 13, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்தில் 20 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள syabu பறிமுதல்: மேலும் 5 மலேசியர்கள் கைது
உலகச் செய்திகள்

தாய்லாந்தில் 20 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள syabu பறிமுதல்: மேலும் 5 மலேசியர்கள் கைது

Share:

பேங்காக், மே.17-

தாய்லாந்து நாட்டின் Nakhon Pathom பகுதியில் 20 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்புள்ள 440 கிலோ syabu வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், கடந்த மே 14-ஆம் தேதி, மேலும் 5 மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மே 5ஆம் தேதி Hat Yai பகுதியில் 5 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்புள்ள 102 கிலோ syabu பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, Songkhla மாநிலத்தின் பாடாங் பெசார் வழியாக தாய்லாந்துக்குள் நுழைந்த மலேசிய வாகனங்களை அந்நாட்டு போலீசார் கண்காணித்தனர்.

இந்நிலையில், Nakhon Pathom மாநிலத்தின் Muang மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 5 பேர் கைது செய்யப்பட்டதுடன், 4 வாகனங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 440 கிலோ syabu கைப்பற்றப்பட்டது.

இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் சொத்துகள், நிதி பரிவர்த்தனைகள் மற்றும் தாய்லாந்தில் அவர்களுக்கு உதவிய உள்ளூர் தொடர்புகளை கண்டறியும் விசாரணையை அதிகாரிகள் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகின்றனர்.

Related News

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

ஜாவா கடலில் 243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது – ஒருவர் பலி; 140 பேரை தேடும் பணி தீவிரம்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை