Jul 21, 2026
Thisaigal NewsYouTube
மீண்டும் அனல் பறக்கும் மதுரை? 'ஜிகர்தண்டா 3' குறித்த ரகசியத்தை உடைத்த கார்த்திக் சுப்பராஜ்!
சினிமா

மீண்டும் அனல் பறக்கும் மதுரை? 'ஜிகர்தண்டா 3' குறித்த ரகசியத்தை உடைத்த கார்த்திக் சுப்பராஜ்!

Share:

சினிமாவையும் ரவுடியிசத்தையும் இணைத்து ஒரு புதிய ஜானரையே உருவாக்கியவர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் வெளியான 'ஜிகர்தண்டா' படங்கள் தமிழ்த் திரையுலகில் ஒரு மைல்கல்லாக அமைந்தன. இந்நிலையில், மூன்றாம் பாகம் குறித்து அவர் பேசுகையில், "என்னிடம் அதற்கான ஒரு சிறந்த யோசனை இருக்கிறது. ஜிகர்தண்டா 3 நிச்சயமாக நடக்கும். ஆனால், அதற்கு முன்னதாக நான் முடிக்க வேண்டிய சில கமிட்மென்ட்கள் உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் சினிமா எப்படி ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது என்பதை உணர்ச்சிகரமாகக் காட்டியிருந்தார். அதே பாணியில் மூன்றாம் பாகத்திலும் ஒரு வலுவான சமூகக் கருத்தை அவர் முன்வைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related News