Jul 21, 2026
Thisaigal NewsYouTube
'கான்சிட்டி' திரைப்படம் ஒடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு
சினிமா

'கான்சிட்டி' திரைப்படம் ஒடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு

Share:

அர்ஜுன் தாஸ் மற்றும் அன்னா பென் நடிப்பில் வெளியான 'கான்சிட்டி' திரைப்படம் வரும் ஜூலை 24-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் குற்றப் பின்னணியைக் கொண்ட கதையாக உருவான இப்படம் திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்றதைத் தொடர்ந்து, தற்போது டிஜிட்டல் தளத்தில் வெளியாகவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரையரங்குகளில் இப்படம் எதிர்பார்த்த அளவு பெரிய அளவில் வசூல் சாதனை படைக்கவில்லை என்றாலும், அர்ஜுன் தாஸின் நடிப்பு மற்றும் ஷான் ரோல்டனின் பின்னணி இசை ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. திரையரங்குகளில் இப்படத்தைத் தவறவிட்ட பல சினிமா ரசிகர்கள் இதன் டிஜிட்டல் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர்.

யோகி பாபு, வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாவதன் மூலம் உலகளவில் உள்ள அதிகமான தமிழ் சினிமா ரசிகர்களைச் சென்றடையும் என்றும், டிஜிட்டல் தளத்தில் இப்படம் நல்ல வரவேற்பைப் பெறும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related News