Jun 6, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

Share:

ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்த எந்த தொகுதியிலும், முன்னாள் அமைச்சரான டத்தோஸ்ரீ ரபிசி ரம்லி போட்டியிடலாம், அது அவரது தனிப்பட்ட உரிமையும், சுதந்திரமும் என அம்மாநில பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவர் ஜிம்மி புவா தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பிகேஆர் கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்த ரபிசி ரம்லி, பார்ட்டி பெர்சாமா மலேசியா கட்சியுடன் இணைந்து அதனை வழிநடத்தப் போவதாக அறிவித்தார்.

இந்நிலையில், அவர் ஜோகூர் மாநிலத்தில் போட்டியிடப் போவதாகத் சில தரப்பினர் கூறி வருவது குறித்து ஜிம்மி புவாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ள ஜிம்மி புவா, எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் விரும்பும் எந்தத் தொகுதியிலும் போட்டியிடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், ரபிசியின் கட்சியோ அல்லது மூடா மற்றும் வாரிசானோ, பிற கட்சிகள் எதுவாக இருந்தாலும், அதனை எதிர்கொள்ளும் அளவுக்கு நமது கட்சி இயந்திரம் வலுவாக இருக்க வேண்டும் என்பதையே நாம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்