May 20, 2026
Thisaigal NewsYouTube
இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை
தற்போதைய செய்திகள்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

Share:

இஸ்ரேலியப் படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள குளோபல் சுமூத் புளோட்டிலா 2.0 அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களில் அடங்கியுள்ள 25 மலேசியர்களின் நிலை குறித்து, கடந்த 48 மணி நேரங்களாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என தி சுமூத் நுசாந்தாரா கட்டுப்பாட்டு மையம் (எஸ்என்சிசி) தெரிவித்துள்ளது.

இது குறித்து இன்று சிப்பாங்-இல் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எஸ்என்சிசி தலைமை இயக்குநர் டத்தோ சானி அராபி அப்துல் அலிம், அவர்கள் தாக்கப்பட்டிருக்கலாம் அல்லது கடுமையான முறையில் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், அஷ்டோத் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு 48 மணி நேரங்கள் கடந்தும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் கிடைக்கவில்லை என்றால், இது உலக நாடுகள் கவனம் செலுத்தி தலையிட வேண்டிய ஒரு சம்பவமாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக வெளியான தகவல்களில், துருக்கியின் மர்மாரிஸ் துறைமுகத்திலிருந்து காசாவை நோக்கி 54 கப்பல்கள் புறப்பட்டதைத் தொடர்ந்து, இந்த மனிதாபிமானப் பயணம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், செயல்பாட்டு பகுதியில் நிலவும் பாதுகாப்பு அபாய மதிப்பீட்டின் அடிப்படையில், மஞ்சள் மற்றும் சிவப்பு மண்டல எல்லைகளும் புதுப்பிக்கப்பட்டதாக எஸ்என்சிசி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சிறை பிடிக்கப்பட்டவர்கள் அஷ்டோத் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு, "சிறைக் கப்பலில்" வைக்கப்பட்டிக்கலாம் என நம்பப்படுவதாக சானி அராபி தெரிவித்துள்ளார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

சிலாங்கூர் சிஐடி போலீஸ் அதிகாரி மர்ம மரணம் - ஷா ஆலம் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்ததாக சந்தேகம்

சிலாங்கூர் சிஐடி போலீஸ் அதிகாரி மர்ம மரணம் - ஷா ஆலம் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்ததாக சந்தேகம்