Sep 26, 2026
Thisaigal NewsYouTube
பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

Share:

நெகிரி செம்பிலான் மாநிலம், பண்டார் ஸ்ரீ செண்டாயான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், குழந்தை பராமரிப்பாளரின் கவனிப்பில் இருந்த ஏழு மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு 10 மணியளவில் அக்குழந்தை சுயநினைவிழந்த நிலையில் இருந்ததைக் கண்ட அந்த பராமரிப்பாளர், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாக அக்குழந்தையின் 30 வயதான தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அக்குழந்தைக்கு துவாங்கு ஜாஃபர் மருத்துவமனையில் அவசர முதலுதவி சிகிச்சையளித்த மருத்துவர்கள், அக்குழந்தை உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சவப்பரிசோதனைக்காக அக்குழந்தையின் சடலமானது ரெம்பாவ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் அசஹார் அப்துல் ரஹிம் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த பராமரிப்பாளர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.

Related News