Sep 26, 2026
Thisaigal NewsYouTube
கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

Share:

கடந்த ஞாயிற்றுக்கிழமை, கெடா மாநிலம் கெப்பாலா பத்தாஸ், ஜாலான் தித்தி காஜா பகுதியில் உள்ள ஓர் உணவகத்தின் முன்பு, காரில் இருந்த பெண், கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

சுமார் ஆறு அங்குல நீளமுடைய “ராம்போ” கத்தி ஒன்று சந்தேகநபரின் வழிகாட்டுதலின் பேரில் கடந்த திங்கட்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவிலுள்ள வயல் வெளியில் அந்தக் கத்தியானது மீட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தாக்குதலுக்கு உள்ளான தனித்து வாழும் தாயான அப்பெண், தற்போது அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் இருப்பதாகவும் அட்ஸ்லி அபு ஷா தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக 32 வயது ஆடவரைக் கைது செய்துள்ள போலீசார் அவரிடம் மேலதிக விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.

Related News