Oct 9, 2026
Thisaigal NewsYouTube

நாடு முழுவதும் 37 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்குச் சரிவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நாடு முழுவதும் 37 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்குச் சரிவு

நாடு முழுவதும் 37 இடங்களில் காற்று மாசுக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது. இன்று பிற்பகல் 1 மணிக்கு வெளியிடப்பட்ட தரவின்படி, நெகிரி செம்பிலானின் சிரம்பான், ஜோகூரில் பாசீர் கூடாங் ஆகிய இரு இடங்களிலும் குறியீடு 188 ஆகப் பதிவாகியுள்ளது.

ஜோகூரில் எட்டு இடங்களிலும், சிலாங்கூரில் ஆறு இடங்களிலும், பேராக்கில் ஐந்து இடங்களிலும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது. கோலாலம்பூர், புத்ராஜெயா உள்ளிட்ட பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

காற்று மாசுக் குறியீடு 101 முதல் 200 வரை இருந்தால் அது ஆரோக்கியமற்ற நிலையாகக் கருதப்படுகிறது. பொதுமக்கள், குறிப்பாகக் குழந்தைகள்,முதியவர்கள் மற்றும் சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →