Jun 24, 2026
Thisaigal NewsYouTube
2027: 6 வயது மாணவர்களின் விண்ணப்பங்கள் குறைந்ததால் ஆசிரியர் ஆட்சேர்ப்பு குறைப்பு!
தற்போதைய செய்திகள்

2027: 6 வயது மாணவர்களின் விண்ணப்பங்கள் குறைந்ததால் ஆசிரியர் ஆட்சேர்ப்பு குறைப்பு!

Share:

2027-ஆம் ஆண்டு முதலாம் வகுப்பில் சேர, 6 வயதுடைய மாணவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட 4 லட்சம் விண்ணப்பங்களுக்குப் பதிலாக 73,386 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன.

இந்த எண்ணிக்கைக் குறைவு காரணமாக, அடுத்த ஆண்டுக்கான ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்களின் ஆட்சேர்ப்பு இலக்கு 20,000-லிருந்து 3,150 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது என்று கல்வி துணை அமைச்சர் வொங் கா வோ தெரிவித்துள்ளார்.

இருப்பினும்,7 வயது மாணவர்களையும் சேர்த்து மொத்தமாக 4,78,419 மாணவர்கள் முதலாம் வகுப்பில் பதிவு செய்துள்ளனர். இதனால் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைக்கவும் கூடுதல் இடவசதியை உருவாக்கவும் நாடு முழுவதும் உள்ள 838 பள்ளிகளில் 2,596 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த தொடக்கப் பள்ளி சேர்க்கை கட்டாயமற்றது என்றும், மாணவர்களின் பள்ளித் தயார்நிலையை அறியத் தகுதிச் சோதனை நடத்தப்படும் என்றும் துணை அமைச்சர் வொங் கா வோ குறிப்பிட்டுள்ளார்.

Related News