எதிர்காலத்தில் தடையற்ற சுங்கச்சாவடி முறையைச் செயல்படுத்தும் வகையில், RM1.7 பில்லியன் செலவில் புதிய பந்தாய் விரைவுச்சாலை 2 இணைப்புத் திட்டம் வடிவமைக்கப்பட்டு வருவதாக ஐ.ஜே.எம் கார்ப்பரேஷன் சுங்கச்சாவடி பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி சுவா லே ஹூன் தெரிவித்துள்ளார்.
2029 அக்டோபருக்குள் நிறைவடையவுள்ள இந்த 6.4 கி.மீ நீள விரைவுச்சாலைத் திட்டம், ஒருவேளை தடையற்ற சுங்கச்சாவடி முறை இறுதி செய்யப்படாவிட்டாலும் பெரிய உள்கட்டமைப்பு மாற்றமின்றி ஆர்.எஃப்.ஐ.டி அல்லது டச் அண்ட் கோ முறைகளைப் பயன்படுத்தும் வசதியைக் கொண்டுள்ளது.
இத்திட்டம் முழுமையடையும் போது பெங்சார் சாலையின் போக்குவரத்து நெரிசலை 40 விழுக்காடு வரை குறைத்து, பயண நேரத்தை 25 நிமிடங்கள் வரை மிச்சப்படுத்தும் என்று சுவா குறிப்பிட்டுள்ளார்.








