Jun 24, 2026
Thisaigal NewsYouTube
எரிபொருள் மானியத் திட்டத்தை விரிவுபடுத்தும் திட்டம் அரசிடம் இல்லை: துணை நிதியமைச்சர்
தற்போதைய செய்திகள்

எரிபொருள் மானியத் திட்டத்தை விரிவுபடுத்தும் திட்டம் அரசிடம் இல்லை: துணை நிதியமைச்சர்

Share:

அண்மையில் டீசல் விலை மாற்றத்தைத் தொடர்ந்து, நாட்டில் எரிபொருள் மானியத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் திட்டம் அரசிடம் இல்லை என்று துணை நிதியமைச்சர் லியூ சின் தோங் தெரிவித்துள்ளார்.

ஏசிசிஏ வரி மீதான மாநாட்டில் பேசிய லியூ சின் தோங், தற்போது ஆர்.ஓ.என்95 மற்றும் டீசல் மானியங்கள் அனைத்தும் ‘பூடி மதானி’ கட்டமைப்பின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். முன்னதாக வழங்கப்பட்ட நேரடி ரொக்க மானியங்களுக்குப் பதிலாக, இனி அனைத்தும் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும் என்றார்.

நாடு தழுவிய மானிய சீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் மானிய விலை டீசல் லிட்டருக்கு 2 ரிங்கிட் 10 சென்னாக மாற்றியமைக்கப்படும் என்றும், இது 'மைக்காட்' முறை மூலம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், வரவிருக்கும் 2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், நாட்டின் பொருளாதாரத் திறன் மற்றும் விநியோகச் சங்கிலிப் பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related News