Sep 25, 2026
Thisaigal NewsYouTube
பணப்பை திருட்டு: விநியோகப் பணியாளர் மீது விசாரணை தீவிரம்
தற்போதைய செய்திகள்

பணப்பை திருட்டு: விநியோகப் பணியாளர் மீது விசாரணை தீவிரம்

Share:

பல்நோக்கு பேரங்காடி' ஒன்றில் தவறவிடப்பட்ட பணப்பையிலிருந்து 10 ஆயிரம் ரிங்கிட் ரொக்கத்தைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் 37 வயது விநியோகப் பணியாளருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் மேலும் விசாரணை நடத்துமாறு போலீஸ் துறைக்கு துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கு விசாரணையின் முகாந்திரங்களை வலுப்படுத்துவதற்கு மேலும் சில கூடுதல் விவரங்களை துணை பப்ளிக் பிராசிகியூட்டர் கோரியிருப்பதாக சிலாங்கூர் மாநில போலீஸ்த் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரான விநியோகிப்பு பணியாளர், விசாரணைக்கு பின்னர் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும், கட்டடத்திற்குள் நுழைந்து திருடியது தொடர்பில் அந்த நபருக்கு எதிரான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News