Jul 10, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் 42,807-க்கும் அதிகமானோர் வேலை இழப்பு
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் 42,807-க்கும் அதிகமானோர் வேலை இழப்பு

Share:

நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை மொத்தம் 42,807 தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வணிக நிறுவனங்கள் மூடப்பட்டதும், நிறுவனங்களின் அளவைச் சுருக்கியதுமே இந்த வேலை இழப்புகளுக்கு முக்கியக் காரணங்கள் ஆகும். இதனால் 17,485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சமூக பாதுகாப்பு அமைப்பின் பெர்கேசோ புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போதைய வேலை இழப்புகளுக்கு முக்கியக் காரணம் என்ற கருத்து தவறானது என்று தெரிவித்த அவர், தொழிலாளர்கள் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கடந்த ஜனவரி முதல் மைஃபியூச்சர்ஜாப்ஸ் போர்ட்டல் மூலம் 605,168 வேலை வாய்ப்புகள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதால், நாட்டின் வேலை வாய்ப்பு சந்தையில் தொழிலாளர்களுக்கான தேவை இன்னும் அதிகமாகவே உள்ளது என்றும் ரமணன் தெரிவித்துள்ளார்.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்