Jun 24, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் தேர்தல்: பெர்சத்து கட்சி அதிக இடங்களில் போட்டி - சனுசி அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

ஜோகூர் தேர்தல்: பெர்சத்து கட்சி அதிக இடங்களில் போட்டி - சனுசி அறிவிப்பு

Share:

வருகிற ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலில், பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியில் உள்ள கட்சிகளிலேயே பெர்சத்து கட்சிதான் அதிக இடங்களில் போட்டியிடும் என்று அக்கூட்டணியின் தேர்தல் இயக்குநர் சனுசி நோர் தெரிவித்துள்ளார்.

பாஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற தொகுதிப் பங்கீட்டுக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய சனுசி நோர் , கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான 34 தொகுதி முரண்பாடுகள் அனைத்தும் சுமுகமாகத் தீர்க்கப்பட்டுவிட்டதாகக் கூறினார். கட்சியின் பலம், வாக்காளர் ஆதரவு மற்றும் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இத்தேர்தலில் பெஜுவாங் கட்சி புக்கிட் காம்பீர் தொகுதியில் மட்டும் போட்டியிடும் என்றும், அனைத்து வேட்பாளர்களும் பெரிக்காத்தான் நேஷனல் சின்னத்தின் கீழேயே போட்டியிடுவார்கள் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். மேலும், பாஸ் கட்சியின் வேட்பாளர்கள் நாளை மூவாரில் அறிவிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

Related News