கடந்த மாதம் கிள்ளான், தாமான் செந்தோசா உத்தாமாவில் ஆடவர் ஒருவர் சராமரியாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த B. பிரகாஷ் ராவ் என்ற நபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
ரைடர் என்று அழைக்கப்படும் 41 வயது நபர் நேற்று இரவு 9.50 மணியளவில் ஷா ஆலாம், செக்ஷன் 25, ஜாலான் அபாடி என்ற இடத்தில் கைது செய்யப்பட்டதாக தென் கிள்ளான் மாட்ட போலீஸ் தலைவர் எசிபி சா ஹொங் ஃபொங் தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு ஏதுவாக பிரகாஷ் ராவை வரும் ஜுன் 14 ஆம் தேதி வரையில் தடுத்து வைப்பதற்கு போலீசார் இன்று நீதிமன்ற ஆணையை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த மே 26 ஆம் தேதி 34 வயது நபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரகாஷ் ராவ் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


