பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
சூதாட்ட நிறுவனங்களிடமிருந்த எதிர்க்கட்சியினர் அரசியல் நிதியை பெற்று வருகின்றனர் என்று பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவரான அன்வார் கூறியதாக முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் குற்றஞ்சாட்டுகிறார்.
பிரதமர் அன்வாரின் குற்றச்சாட்டில் அடிப்படை உண்மையில்லை, முற்றிலும் அவதூறாகும் என்று முகைதீன் குறிப்பிட்டார்.
அன்வாரின் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தற்போது தமது வழக்கறிஞருடன் கலந்து ஆலோசித்து வருவதாக முகைதீன் தெரிவித்தார்.

Related News

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

நஜிப் மன்னிப்பு வாரியக் கூட்டக் குறிப்புகளை வெளியிட அம்பிகாவும் மரியாவும் கோரிக்கை

அரண்மனை விவகாரத்தில் மௌனம் ஏன்? அக்மாலை சாடும் சிவமலர்

55 மலேசியர்களின் நிலை குறித்து நேபாளப் பிரதமரிடம் அன்வார் நேரடியாக பேச்சு

பத்து பஹாட் கடற்பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்


