Jun 12, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போ மூதாட்டி கொலை: சந்தேக நபர் போதையில் இருந்ததாக போலீஸ் தகவல்
தற்போதைய செய்திகள்

ஈப்போ மூதாட்டி கொலை: சந்தேக நபர் போதையில் இருந்ததாக போலீஸ் தகவல்

Share:

ஈப்போ, மே.05-

ஈப்போ, தாமான் டேசா அமான் பகுதியில், நேற்று 70 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நபர், சம்பவம் நடந்த நேரத்தில் போதையில் இருந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கொலைக்கான நோக்கம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர், முன்பு மனநல சிகிச்சை பெற்றவர் என்பதும், முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதே வேளையில், அவர் கைது செய்யப்படும் போது, போதையில் இருந்ததாகவும், சம்பவ இடத்தில் பல பீர் டின்கள் மீட்கப்பட்டதாகவும், பேரா மாநில போலீஸ் தலைவர் நோர் ஹிசாம் நோர்டின் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Related News