Mar 24, 2026
Thisaigal NewsYouTube
FA கிண்ண அரையிறுதி ஆட்டம்; 351 போலீஸ் உறுப்பினர்கள் பணிக்கு அமர்த்தபடவுள்ளனர்
தற்போதைய செய்திகள்

FA கிண்ண அரையிறுதி ஆட்டம்; 351 போலீஸ் உறுப்பினர்கள் பணிக்கு அமர்த்தபடவுள்ளனர்

Share:

கோலா திரங்கானு , ஜூலை17-

FA கிண்ண அரையிறுதி ஆட்டம்; 351 போலீஸ் உறுப்பினர்கள் பணிக்கு அமர்த்தபடவுள்ளனர்

திரங்கானு FC - சிலாங்கூர் FC இடையிலான FA கிண்ண அரையிறுதி காற்பந்தாட்டத்தைக் கண்காணிக்க, மொத்தம் 351 போலீஸ் உறுப்பினர்கள் பணிக்கு அமர்த்தப்படவுள்ளனர்.

வருகின்ற வெள்ளிக்கிழமை, திரங்கானு-விலுள்ள சுல்தான் மிசான் ஜைனால் அபிதீன் அரங்கில் நடைப்பெறும் அவ்வாட்டத்தின் போது, அரங்கின் நுழைவாயிலிலும் உள்ளேயும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டிருப்பதாக,கோலா திரங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்லி தெரிவித்தார்.

இதர தரப்பினரை சீனமூட்டக்கூடிய பதாகைகள், பட்டாசுகள், கூர்மையான ஆயுதம் என தடைசெய்யப்பட்ட பொருட்களை, காற்பந்து ரசிகர்கள் அரங்கினுள் கொண்டு வர தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் அஸ்லி கூறினார்.

Related News