Jun 9, 2026
Thisaigal NewsYouTube
காரை மோதி ஓட்டுநரைத் தாக்கிய நபர் கைது
தற்போதைய செய்திகள்

காரை மோதி ஓட்டுநரைத் தாக்கிய நபர் கைது

Share:

டாமன்சாரா பெர்டானாவில் இன்று அதிகாலை சிவப்பு விளக்கு சமிக்ஞையை மீறிச் சென்று மற்றொரு காரின் மீது மோதியதுடன், அதன் ஓட்டுநரையும் தாக்கிய இருபது வயது மதிக்கத்தக்க உள்ளூர் இளைஞர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த விபத்தில் காரில் பயணித்த இருபது வயது மதிக்கத்தக்க உள்ளூர் பெண்மணி ஒருவர் காயமடைந்தார். ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டிய குற்றத்திற்காகப் பெட்டாலிங் ஜெயா மாவட்டப் போலீஸ் தலைமையக வளாகத்தில் அந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அந்த சந்தேக நபரின் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ள வேளையில், நாளை ஞாயிற்றுக்கிழமை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்படுவார் என்று மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் ஷம்சுடின் மாமட் தெரிவித்துள்ளார்.

Related News