Sep 26, 2026
Thisaigal NewsYouTube
முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் தீவிரமடைந்தது
தற்போதைய செய்திகள்

முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் தீவிரமடைந்தது

Share:

ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் பள்ளி விடுமுறையையொட்டி கிள்ளான் பள்ளத்தாக்கு, காராக் மற்றும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை இன்று சனிக்கிழமை கணிசமாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக, வடக்கே பீடோர் முதல் கோப்பெங் வரையிலும், தெற்கே செனவாங் மற்றும் ஆயர் ஈத்தாம் பகுதிகளிலும் வாகனங்கள் மிக மெதுவாக நகர்கின்றன

நேற்று வரை சுமார் 29 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் நுழைந்துள்ளதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியமான எல்எல்எம் தெரிவித்துள்ளது,

ஹஜ்ஜுப் பெருநாள் பயணங்களுக்கான இந்த நெரிசல் கிழக்குக்கரை வழித்தடங்களில் மே 26 தேதி வரையிலும், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் மே முப்பதாம் தேதி வரையிலும் நீடிக்க வாய்ப்புள்ளது என்று ஆருடம் கூறப்பட்டுள்ளது.

Related News