May 23, 2026
Thisaigal NewsYouTube
பி.கே.ஆர் கட்சியிலிருந்து வெளியேற ஓராண்டு காலம் அழுத்தம்: ரஃபிஸி ரம்லி குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பி.கே.ஆர் கட்சியிலிருந்து வெளியேற ஓராண்டு காலம் அழுத்தம்: ரஃபிஸி ரம்லி குற்றச்சாட்டு

Share:

பி.கே.ஆர் நீதிக் கட்சியிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக, தாமும் அக்கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் நிக் நஸ்மியும் ஓராண்டு காலமாகப் பலத்த அழுத்தங்களை எதிர்கொண்டதாக அதன் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.

கட்சியின் இயந்திரத்தைப் பயன்படுத்தித் தங்களுக்குத் தொடர் நெருக்கடிகளும், தங்களின் குடும்பத்தினர் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டதாக ரஃபிஸி குற்றம் சாட்டினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தங்களை நேரடியாகப் பதவியிலிருந்து நீக்காமல், தங்களுக்குக் கீழ் உள்ளவர்களைக் கொண்டு இந்த வேலைகளைச் செய்ய அனுமதித்ததாகக் குறிப்பிட்ட ரஃபிஸி, தாங்கள் வெளியேறிய பிறகு தம்மீது சுமத்தப்படும் ‘துரோகிகள்’ என்ற குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படை அற்றது என்று மறுத்துள்ளார்.

Related News