Aug 28, 2026
Thisaigal NewsYouTube
நேபாள வெள்ளம்: காணாமல் போன 57 மலேசியர்களில் இருவர் கண்டுபிடிப்பு
தற்போதைய செய்திகள்

நேபாள வெள்ளம்: காணாமல் போன 57 மலேசியர்களில் இருவர் கண்டுபிடிப்பு

Share:

நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தைத் தொடர்ந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட 57 மலேசியர்களில் இருவர் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

மீதமுள்ள மலேசியர்களைக் கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேபாள அதிகாரிகள், சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் மலேசிய அரசாங்கம் இணைந்து அவர்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

வெள்ளத்தில் சிக்கியவர்களில் சிலர் கைலாச யாத்திரை பயணத்தை மேற்கொண்டவர்கள் என்பதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் மேலும் சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது.

மலேசியர்களின் பாதுகாப்பான நிலை குறித்து உறுதி செய்யப்படும் தகவல்களை விஸ்மா புத்ரா தொடர்ந்து வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News