Aug 28, 2026
Thisaigal NewsYouTube
நேபாளத்திற்கு உதவி அனுப்ப மலேசியா ஒருங்கிணைப்பு – ஸ்மார்ட் குழுவை அனுப்பவும் நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

நேபாளத்திற்கு உதவி அனுப்ப மலேசியா ஒருங்கிணைப்பு – ஸ்மார்ட் குழுவை அனுப்பவும் நடவடிக்கை

Share:

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்து, அந்நாட்டிற்கு மனிதாபிமான உதவிகளை அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மலேசியா ஒருங்கிணைத்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக மலேசியாவின் ஸ்மார்ட் சிறப்பு மீட்புக் குழுவை நேபாளத்திற்கு அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு வருகின்றன.

விஸ்மா புத்ரா மற்றும் சம்பந்தப்பட்ட மலேசிய அதிகாரிகள், நேபாள அரசாங்கத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து அங்கு சிக்கியுள்ள மலேசியர்களின் நிலைமை குறித்து கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.

வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை விரைவாக வழங்குவதுடன், காணாமல் போன மலேசியர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என பிரதமர் தெரிவித்தார்.

நேபாளத்தில் இருந்த மலேசியர்களில் 55 பேர் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மலேசிய அரசாங்கம் இந்த துரித நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

Related News