Sep 6, 2026
Thisaigal NewsYouTube
சரவணன் வழக்குடன் தொடர்பில்லை – ஜெட்ரிக்ஸ் ஏஐ மறுப்பு
தற்போதைய செய்திகள்

சரவணன் வழக்குடன் தொடர்பில்லை – ஜெட்ரிக்ஸ் ஏஐ மறுப்பு

Share:

முன்னாள் மனித வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் மீதான லஞ்ச ஊழல் வழக்குடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என பொதுப் பட்டியலிடப்பட்ட ஜெட்ரிக்ஸ் ஏஐ குரூப் குழுமம் மறுத்துள்ளது.

சரவணன் வழக்குடன் நிறுவனத்தை தொடர்புபடுத்தி ஆதாரமற்ற வதந்திகள் மற்றும் ஊகங்கள் பரவியிருக்கலாம் என்றும், அதுவே நிறுவனப் பங்குகளின் அண்மைய வர்த்தக நடவடிக்கையை பாதித்திருக்கக்கூடும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

காலை வர்த்தகத்தில் ஜெட்ரிக்ஸ் பங்கு விலை 50.4 விழுக்காடு சரிந்து 29.5 சென்னாக வீழ்ந்தது. இதனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் சுமார் 2.4 பில்லியன் ரிங்கிட் குறைந்தது.

எனினும், நாள் முடிவில் பங்கு விலை 59.5 சென்னாக இருந்தது.

சரவணன் மீதான வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீடு தொடர்பான மூன்று லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளுடன் நிறுவனத்திற்கோ அதன் வர்த்தக நடவடிக்கைகளுக்கோ எந்த தொடர்பும் இல்லை என்று ஜெட்ரிக்ஸ் ஏஐ தெளிவுபடுத்தியுள்ளது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து