Oct 7, 2026
Thisaigal NewsYouTube

224 சாலைக் குழிகள் மூடப்பட்டுள்ளன

திசைகள் செய்திப்பிரிவு
Share:
224 சாலைக் குழிகள் மூடப்பட்டுள்ளன

கோலாலம்பூர், ஆகஸ்ட்.27-

இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை பேரா, கெரிக்கிலிருந்து கிளந்தான் ஜெலிக்குச் செல்லும் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை முழுவதிலும் உள்ள 224 சாலைக் குழிகள் மூடப்பட்டுள்ளன.

பொதுமக்களின் புகார்களின் அடிப்படையில், அடையாளம் காணப்பட்ட எந்தவொரு சாலைச் சேதத்தையும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பராமரிப்புக் குத்தகை நிறுவனத்தால், 24 மணி நேரத்திற்குள் சரி செய்யப்படும் என்று பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

அதனைத் தவிர்த்து, எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தால், உடனடி நடவடிக்கையாக, அவசர காலப் பணிகளை மேற்கொள்வதற்கு அக்குத்தகைகள் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்று அலெக்சண்டர் நந்தா லிங்கி குறிப்பிட்டார்.

அதிகமான மரண விபத்துகளைச் சந்தித்திருக்கும் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால உள்கட்டமைப்புச் சிக்கல்களுக்கு விரிவான தீர்வுகள் குறித்து செனட்டர் டத்தோ ஷம்சுடின் அப்துல் கஃபார் மேலவையில் எழுப்பிய கேள்விக்கு அலெக்சண்டர் நந்தா லிங்கி இவ்வாறு பதிலளித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான பள்ளிச்சூழல் வேண்டும் – சுஹாகாம் வலியுறுத்து

ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான பள்ளிச்சூழல் வேண்டும் – சுஹாகாம் வலியுறுத்து

பட்டதாரிகளின் குறைந்த தொடக்க ஊதியத்தை 2027 வரவு செலவுத் திட்டம் தீர்க்க வேண்டும் – டத்தோ கமலநாதன்

பட்டதாரிகளின் குறைந்த தொடக்க ஊதியத்தை 2027 வரவு செலவுத் திட்டம் தீர்க்க வேண்டும் – டத்தோ கமலநாதன்

“அவர்  இனி இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை” – காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தோழி கதறல்

“அவர் இனி இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை” – காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தோழி கதறல்

அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் கார் தீப்பிடிப்பு; 3 பெண்களுக்கு மூச்சுத் திணறல்

அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் கார் தீப்பிடிப்பு; 3 பெண்களுக்கு மூச்சுத் திணறல்

இசிஆர்எல் பயணக் கட்டணம் இம்மாதம் அறிவிப்பு; நவம்பரில் டிக்கெட் விற்பனை

இசிஆர்எல் பயணக் கட்டணம் இம்மாதம் அறிவிப்பு; நவம்பரில் டிக்கெட் விற்பனை

அக்டோபர் 9 முதல் பருவமழை இடைக்கால மாற்றம்; இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு

அக்டோபர் 9 முதல் பருவமழை இடைக்கால மாற்றம்; இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு