Jul 3, 2026
Thisaigal NewsYouTube
காணாமல் போன 14 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு
தற்போதைய செய்திகள்

காணாமல் போன 14 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு

Share:

ஷா ஆலாமில் உள்ள ரிம்பா அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து காணாமல் போன 14 வயது சிறுவன், 10 நாட்களுக்குப் பிறகு கோலாலம்பூரில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 23ஆம் தேதி காலை தனது தாயாருக்கு மன்னிப்புக் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியதாகக் கடந்த செவ்வாய்க்கிழமை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், புக்கிட் பிந்தாங்கில் உள்ள ஒரு உணவகத்தின் அருகிலுள்ள நடைபாதையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் சிறுவனின் பெற்றோர்கள் அவனைக் கண்டுபிடித்தனர்.

சிறுவன் காணாமல் போன நாட்களில் புக்கிட் பிந்தாங் பகுதியிலேயே சுற்றித் திரிந்ததாகவும், அந்த உணவகத்திலேயே உறங்கியதாகவும் போலீஸார் தெரிவித்தனர். சிறுவனுக்கு எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை என்றும், அவன் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாகவும் ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் சாருதின் சாமா தெரிவித்தார்.

Related News