சரவாக் மற்றும் சபாவில் அண்மைய காலமாக ஏற்பட்ட விமானக் தாமதங்கள் மற்றும் ரத்துகளால் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் ஏர்போர்னியோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய அதன் தலைமை நிர்வாக அதிகாரி மேகாட் ஆர்டியன் வீரா, திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் மற்றும் உதிரிப் பாகங்கள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, ஒரே நேரத்தில் சில விமானங்கள் இயங்க முடியாமல் போனதே இந்தச் சேவைப் பாதிப்புக்குக் காரணம் என்று விளக்கமளித்துள்ளார். பயணிகளின் பாதுகாப்பிற்கு முதலிடம் வழங்கி, விமானச் சேவைகளை படிப்படியாக சீரமைக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
மேலும், தங்களின் செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்த விரைவில் 'ATR 72-600' ரக விமானங்கள் சேவையில் இணைக்கப்படவுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்றுப் பயண ஏற்பாடுகள் மற்றும் தங்குமிட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும் ஏர்போர்னியோ தெரிவித்துள்ளது.








