Jul 3, 2026
Thisaigal NewsYouTube
ஆற்றில் விழுந்து பெண் மாயம்: டுங்குன் அருகே தேடுதல் நடவடிக்கை தீவிரம்
தற்போதைய செய்திகள்

ஆற்றில் விழுந்து பெண் மாயம்: டுங்குன் அருகே தேடுதல் நடவடிக்கை தீவிரம்

Share:

மனநலப் பாதிப்புடைய 47 வயது பெண் ஒருவர், திரெங்கானு, டுங்குன், சுங்கை பக்கா பாலத்திலிருந்து ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து அவர் நீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில், தனது வீட்டிற்கு அருகிலுள்ள பாலத்திலிருந்து நோர் ஹஸ்லினி டிம் என்ற பெண் ஆற்றில் விழுந்துள்ளார். இச்சம்பவத்தை நேரில் கண்ட அவரது 77 வயது தந்தை, ஆற்றின் வலுவான நீரோட்டம் காரணமாக அவரைக் காப்பாற்ற முடியாமல் போனதாக டுங்குன் மாவட்ட போலீஸ் தலைவர் நிக் அப் ஹாலிம் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பல்வேறு மீட்பு படையைச் சேர்ந்த சேர்ந்த 27 பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள், ஆற்றில் 2 கிலோமீட்டர் சுற்றளவிற்குத் தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனினும், இன்று மாலை வரை அந்தப் பெண் கண்டுபிடிக்கப்படவில்லை.

Related News