Sep 24, 2026
Thisaigal NewsYouTube
லிண்டுங் 24 ஜாம் திட்டம்: முதல் மாதத்திலேயே பெர்கேசோ RM1.2 மில்லியன் இழப்பீடு வழங்கீடு
தற்போதைய செய்திகள்

லிண்டுங் 24 ஜாம் திட்டம்: முதல் மாதத்திலேயே பெர்கேசோ RM1.2 மில்லியன் இழப்பீடு வழங்கீடு

Share:

சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோ அமைப்பின் வேலைக்கு அப்பாற்பட்ட விபத்துக்கான காப்புறுதித் திட்டமான ‘லிண்டுங் 24 ஜாம்’ அமலாக்கப்பட்ட முதல் மாதத்திலேயே, 1.2 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையை அது வழங்கியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 592 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக பெர்கேசோ இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் பெருமளவிலான தொகை, அதாவது 1.16 மில்லியன் ரிங்கிட் மருத்துவ உள்வைப்புச் செலவுகளுக்காகவும் மீதமுள்ள தொகை தற்காலிக ஊனமுற்றோர் நலன்களுக்காகவும் வழங்கப்பட்டுள்ளது.

வேலை நேரத்திற்கு வெளியே அல்லது வீட்டில் இருக்கும்போது ஏற்படும் விபத்துகளுக்கும் இதன் மூலம் தானியங்கி முறையில் முழுமையான காப்புறுதி வழங்கப்படுவதால், மலேசியத் தொழிலாளர்களுக்கு இது ஒரு விரிவான சமூகப் பாதுகாப்பு வலையமைப்பாக மாறியுள்ளது.

Related News

லிண்டுங் 24 ஜாம் திட்டம்: முதல் மாதத்திலேயே பெர்கேசோ RM1.... | Thisaigal News