Nov 21, 2026
Thisaigal NewsYouTube

மலேசியாவில் வெளிநாட்டினர் கூரியர் விநியோகப் பணியில் ஈடுபடுவதாகப் புகார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசியாவில் வெளிநாட்டினர் கூரியர் விநியோகப் பணியில் ஈடுபடுவதாகப் புகார்

மலேசியாவில் வெளிநாட்டினர் கூரியர் நிறுவனங்களின் சீருடை அணிந்து பார்சல் விநியோகப் பணியில் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

அண்மைய காலமாக அதிகரித்துள்ள இந்த செயல்பாடுகளில் ஈடுபடும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு முறையான பணி அனுமதி உள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதேவேளையில், இந்த குறிப்பிட்ட பணியில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் ஈடுபாடு காரணமாக, உள்ளூர் கூரியர் மற்றும் விநியோகத் தொழிலாளர்களுக்கு நியாயமற்ற போட்டி ஏற்படுவதாக காபுங்கான் இ-ஹெய்லிங் மலேசியா அமைப்பின் தலைவர் மஸ்ரிஸால் மஹிடின் கவலை தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், மலேசியா இ-ஹெய்லிங் ஓட்டுநர் சங்கத் தலைவர் டேரில் சோங்கும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கூரியர் நிறுவனங்கள் பணியாளர்களின் அடையாளம் மற்றும் பணி அனுமதியை முறையாகச் சரிபார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →