Nov 20, 2026
Thisaigal NewsYouTube

அலைத் தடுப்புச் சுவரில் நின்ற பெண் பத்திரமாக மீட்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அலைத் தடுப்புச் சுவரில் நின்ற பெண் பத்திரமாக மீட்பு

லங்காவி, கோலா மூடா பகுதியில் கடல் அலைத் தடுப்புச் சுவரில் ஆபத்தான நிலையில் நின்றிருந்த 35 வயதுப் பெண் ஒருவரைத் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.

இன்று பிற்பகல் 3.16 மணிக்கு இச்சம்பவம் தொடர்பாகத் தகவல் கிடைத்ததாக கெடா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மண்டல நான்குத் தலைவர் முஹமட் ஸம்ரி அப்துல் கானி தெரிவித்தார்.

இதையடுத்து, பாடாங் மாட் சிராட் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த ஏழு வீரர்கள், இரண்டு தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு, கரையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள அலைத்தடுப்புச் சுவரில் அந்தப் பெண் நின்றிருந்தார். அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கலாம் எனக் கருதப்பட்டதால், ஆபத்தான பகுதியிலிருந்து வெளியேறுமாறு தீயணைப்பு வீரர்கள் அவரைச் சமாதானப்படுத்தினர்.

அவர்களின் முயற்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அந்தப் பெண் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டு வரப்பட்டார்.

இந்த மீட்புப் பணியில் மூன்று காவல்துறையினரும், மலேசியத் தன்னார்வப் படையைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களும் உதவினர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →