பகாங் மாநில அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு இரு மாதச் சம்பளத்திற்குச் சமமான சிறப்பு நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
இதற்காக 58 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநில மந்திரி பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்த நிதியுதவி 2027 ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் வழங்கப்படும்.
மேலும், ஹரிராயா கொண்டாட்டத்தை முன்னிட்டு 1,500 ரிங்கிட் சிறப்பு உதவியும் வழங்கப்படும். இதற்காக 12 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பகாங் மாநிலத்தில் பதிவு செய்து, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் பங்களிப்புச் செலுத்தும் கிக் தொழிலாளர்களுக்கு ஒருமுறை 300 ரிங்கிட் உதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் 2027ஆம் ஆண்டுக்கான பகாங் மாநில வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.








