Nov 20, 2026
Thisaigal NewsYouTube

ராணுவச் சீருடையும் பதவியும் குற்றச்செயல்களுக்கு அனுமதியல்ல

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ராணுவச் சீருடையும் பதவியும் குற்றச்செயல்களுக்கு அனுமதியல்ல

ராணுவச் சீருடை, பதவி மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் எனத் தற்காப்புத் துறை ஆய்வாளர் ஸாக்கி சாலே வலியுறுத்தியுள்ளார்.

சுபாங் விமானப்படைத் தளத்தின் ராணுவ விமானப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் விவகாரம், ராணுவத்தின் நேர்மை, ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வு தொடர்பான முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிலாங்கூர் மற்றும் லபுவான் பகுதிகளில் நடத்தப்பட்ட நடவடிக்கையில், ஐந்து விமானப்படை அதிகாரிகள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 96.64 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் மற்றும் 6.98 கிலோ இரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு 4.83 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →