Nov 21, 2026
Thisaigal NewsYouTube

புடு சந்தையில் உலாவும் எலிகள்: உணவுப் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் கவலை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புடு சந்தையில் உலாவும் எலிகள்: உணவுப் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் கவலை

கோலாலம்பூர், புடு சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த முளைகட்டிய பயறு வகைகளின் மீது எலிகள் ஏறி அவற்றை உண்பது போன்ற காட்சிகள் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதனால் அங்குள்ள உணவுப் பொருட்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் மீண்டும் கவலை எழுந்துள்ளது.

டிக்டாக் நேரலை ஒளிபரப்பில் பதிவான இந்தக் காட்சிகள், திரேட்ஸ் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது வைரலாகி வருகின்றது.

அதில், முளைகட்டிய பயறுகள் நிரப்பப்பட்டிருந்த கொள்கலன்களின் மீது பல எலிகள் நடமாடுவதைக் காண முடிவதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட கடையின் சுகாதார நிலை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள பொதுமக்கள், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துள்ளனரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →