Sep 24, 2026
Thisaigal NewsYouTube
சிரம்பானில் முன்னேற்பாட்டுப் பயிற்சி: 2 நாட்களுக்குச் சாலைகள் மூடல்
தற்போதைய செய்திகள்

சிரம்பானில் முன்னேற்பாட்டுப் பயிற்சி: 2 நாட்களுக்குச் சாலைகள் மூடல்

Share:

சிரம்பான் மாநிலத் தேர்தலுக்குப் முன்கூட்டியே தேவையான முன்னேற்பாட்டுப் பயிற்சி காரணமாக இரு நாட்களுக்கு முக்கியச் சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. சிரம்பான் மாநகர் மண்டபத்தில் இப்பயிற்சி நடைபெறவுள்ளது.

இதன் காரணமாக, நாளை மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரையிலும், வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணி முதல் 5.30 மணி வரையிலும் ஜாலான் யாம் துவான்,ஜாலான் டத்தோ ஷேக் அகமட் உட்பட சில முக்கியச் சாலைகள் மூடப்படும் என சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் யாத்திம் ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுமக்கள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துவதோடு, தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Related News