Sep 24, 2026
Thisaigal NewsYouTube
1எம்.டி.பி விவகாரத்தில் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டிய ஒட்டுமொத்தத் தொகை 51.4 பில்லியன் ரிங்கிட்: நிதி அமைச்சு அதிரடி தகவல்
தற்போதைய செய்திகள்

1எம்.டி.பி விவகாரத்தில் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டிய ஒட்டுமொத்தத் தொகை 51.4 பில்லியன் ரிங்கிட்: நிதி அமைச்சு அதிரடி தகவல்

Share:

1எம்.டி.பி விவகாரத்தில், கடந்த ஜூன் 30 வரையிலான கணக்குப்படி மத்திய அரசாங்கம் ஏற்கனவே செலுத்தியுள்ள மற்றும் இனிமேல் செலுத்த வேண்டிய ஒட்டுமொத்தப் பொறுப்புத் தொகை 51.4 பில்லியன் ரிங்கிட்டாகும் என நிதி அமைச்சு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அசல், வட்டி, சட்ட மற்றும் செயல்பாட்டுக் கட்டணங்கள் உட்பட இதுவரை மொத்தம் 42.5 பில்லியன் ரிங்கிட் கடனை மத்திய அரசாங்கம் செலுத்தியுள்ளது. மேலும், வரும் 2039-ஆம் ஆண்டில் முதிர்ச்சியடையவிருக்கும் 8.9 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சுக்குக் ஐஎம்டிஎன் இஸ்லாமிய நடுத்தர காலக் கடன் பத்திரங்களுக்கும் அரசே பொறுப்பேற்றுள்ளது.

முறைகேடு நடந்துள்ள 1எம்.டி.பி நிதி மற்றும் சொத்துகளில் இருந்து இதுவரை 31.3 பில்லியன் ரிங்கிட்டை அரசு வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது. இருப்பினும், இனிவரும் காலங்களில் கூடுதல் நிதி மீட்கப்படாவிட்டாலும், எஞ்சிய 20.1 பில்லியன் ரிங்கிட் நிகரக் கடன் பாக்கியை அரசே ஏற்க வேண்டியிருக்கும் என நிதி அமைச்சு குறிப்பிட்டது.

நாடாளுமன்ற மக்களவையின் கூட்டத்தொடரில், சரவாக், ஸ்டாம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாங் சியங் ஜென், 1எம்.டி.பி கடன்கள் மற்றும் மீட்கப்பட்ட சொத்துகளின் விபரம் குறித்து எழுப்பிய வாய்மொழி கேள்விக்கு நிதி அமைச்சு இவ்வாறு பதிலளித்ததுள்ளது.

Related News