Jul 10, 2026
Thisaigal NewsYouTube
சொக்சோ கோரிக்கைகள் 2 முதல் 3 நாட்களில் தீர்வு: அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் தகவல்
தற்போதைய செய்திகள்

சொக்சோ கோரிக்கைகள் 2 முதல் 3 நாட்களில் தீர்வு: அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் தகவல்

Share:

முழுமையான ஆவணங்கள் பெறப்பட்ட இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் பெரும்பாலான சொக்சோ இழப்பீட்டுக் கோரிக்கைகள் தீர்த்து வைக்கப்படுவதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

பாரிசான் நேஷனலின் தம்பின் எம்.பி. டத்தோ முகமட் ஈசாம் முகமட் ஈசா இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டத்தோஸ்ரீ ரமணன், கடந்த ஆண்டு சொக்சோ தனது வாடிக்கையாளர் சாசனம் இலக்குகளை மிகச் சிறப்பாக எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார். லிண்டுங் பெகெர்ஜா, லிண்டுங் கெந்திரி மற்றும் லிண்டுங் காசிஹ் ஆகிய திட்டங்களில் சராசரியாக 96.86 விழுக்காடு இலக்கும், வேலைவாய்ப்பு காப்புறுதித் திட்டமான லிண்டோங் கெர்ஜாயா திட்டத்தில் 99.68 விழுக்காடு இலக்கும் எட்டப்பட்டுள்ளது.

தற்போது லிண்டுங் ஃபாயிதா இணையதளம் மற்றும் '1Best' முறை மூலம் கோரிக்கைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதால் இந்த வேகம் சாத்தியமாகியுள்ளது. மேலும், போலி இழப்பீட்டுக் கோரிக்கைகளைத் தடுக்க ஏஐ தொழில்நுட்பம் மற்றும் கடுமையான சரிபார்ப்பு முறைகள் பயன்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதிப்படுத்தினார்.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்